search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கரும்பு விவசாயிகள்"

    தனியார் சர்க்கரை ஆலை அதிபரை கைது செய்யக்கோரி கடலூரில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கடலூர்:

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் மாநில செயலாளர் சக்திவேல் கடலூர் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியம் மாவட்ட செயலாளர் சுகுனபூசணன், மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன், விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே இன்று திரண்டனர்.

    விவசாயிகளை ஏமாற்றி மோசடி செய்த தனியார் சர்க்கரை ஆலை அதிபர் மற்றும் வங்கி அதிகாரிகள் கரும்பு ஆலை அதிகாரிகள் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

    அப்போது போலீஸ் அதிகாரிகள் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது என கூறினார்கள்.

    இதையடுத்து அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தனியார் ஆலை அதிபரை கைது செய்ய வேண்டும் அல்லது எங்களை கைது செய்ய வேண்டும் என்று கூறி கோ‌ஷம் எழுப்பினார்கள்.

    அவர்களிடம் உங்கள் கோரிக்கையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணனை சந்தித்து மனு கொடுங்கள் என போலீசார் அறிவுறுத்தினார்கள்.

    இதனைத்தொடர்ந்து அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணனிடம் மனு கொடுக்க சென்றனர்.

    இந்த சம்பவத்தால் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
    நிலுவைத்தொகை வழங்க கோரி தஞ்சை கரும்பு விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோர் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு கடந்த 2015-16 -ம் ஆண்டுக்கான மாநில அரசு அறிவித்த விலை டன் ஒன்றுக்கு ரூ. 450 வீதம் 2 ஆண்டுகளுக்கு சுமார் 30 கோடி ரூபாய் நிலுவைத் தொகை உள்ளது.

    இந்த நிலுவை தொகையை வழங்க கோரி கரும்பு விவசாயிகள் பலமுறை போராட்டம் நடத்தினர். மேலும் சர்க்கரை ஆலை முன்பு காத்திருப்பு போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட கலெக்டரிடமும் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

    இதையடுத்து நிலுவைத்தொகையை கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் தீபாவளி பண்டிகை புறக்கணித்து கருப்பு தீபாவளியாக அனுசரிக்க முடிவு செய்தனர்.

    அதன்படி கரும்பு விவசாயிகள் தஞ்சை குருங்குளம் அண்ணா சர்க்கரை ஆலை முன்பு கருப்பு பேட்ஜ் அணிந்து கையில் கரும்புடன் நேற்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்,

    கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை இன்னும் 15 நாட்களில் வழங்காவிட்டால் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தொடர் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபடுவோம் என்று விவசாயிகள்  தெரிவித்தனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை, திருவையாறு பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் கலந்து கொண்டனர்.
    பெரம்பலூர் சர்க்கரை ஆலைகளை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகள் 94 பேரை போலீசார் கைது செய்தனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் பொதுத்துறை சர்க்கரை ஆலை நிர்வாகம் ரூ.50 கோடி பாக்கி தொகையையும், பெரம்பலூர் தனியார் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு எப்.ஆர்.பி. மற்றும் எஸ்.ஏ.பி. விலைக்குரிய பாக்கி தொகையையும் கரும்பு விவசாயிகளுக்கு உடனடியாக வழங்கிட வேண்டும். வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரை செய்தபடி வேளாண் உற்பத்தி செலவினை கணக்கிட்டு 1½ மடங்கு கூடுதல் விலையை அறிவிக்க வேண்டும். கரும்புக்கான கொள்முதல் விலையை உயர்த்திட வேண்டும்.

    கரும்புக்கான மாநில அரசு பரிந்துரை விலையை அறிவிக்காததை கண்டித்தும், கரும்பு விவசாயிகளை பாதிப்பு ஏற்படுத்திடும் ரெங்கராஜன் கமிட்டி பரிந்துரையை அமல்படுத்தி வருவதனால் விவசாயிகள் கோரிக்கைகளை ஏற்காத மத்திய-மாநில அரசுகளை கண்டித்து அனைத்து விவசாயிகள் சங்கம் மற்றும் டிராக்டர் உரிமையாளர் சங்கம் ஆகியவை இணைந்து பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக சென்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர். இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர்.

    இதனால் நேற்று புதிய பஸ் நிலையத்தில் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், பெரம்பலூர் சர்க்கரை ஆலை கரும்பு உற்பத்தியாளர் சங்க தலைவர் அன்பழகன், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ராஜா சிதம்பரம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணை செயலாளர் ஏ.கே.ராஜேந்திரன் மற்றும் கரும்பு விவசாயிகள் சங்கம், பாட்டாளி கரும்பு விவசாயிகள் சங்கம், கரும்பு வளர்ப்போர் முன்னேற்ற சங்கம், பங்குதாரர் மற்றும் கரும்பு வளர்ப்போர் சங்கம் ஆகிய அனைத்து விவசாயிகள் சங்கத்தை சேர்ந்தவர்களும், டிராக்டர் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் தேவேந்திரன் ஆகியோர் ஊர்வலமாக சென்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக புதிய பஸ் நிலையத்தில் நேற்று காலை ஒன்று திரண்டனர்.

    ஊர்வலமாக செல்வதற்கும், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கிடையாது என்று விவசாயிகளிடம் போலீசார் கூறினர். இதையடுத்து அவர்கள் கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாத மத்திய-மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் திடீரென்று விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்கு புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் விவசாயிகள் திடீரென்று பஸ் நிலையம் முன்பு உள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து வேனில் ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    சாலை மறியலில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகள் 94 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரையும் போலீசார் ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு கரும்பு விவசாயிகள் முற்றுகை-மறியல் போராட்டம் நடத்தியது தொடர்பாக 75 பேரை போலீசார் கைது செய்தனர்.
    மதுரை:

    தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கம், தென்னக கரும்பு விவசாயிகள் மேம்பாட்டு சங்கம் மற்றும் முல்லை பெரியாறு ஒருபோக விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த ஏராளமானோர் இன்று கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர்.

    அவர்கள் நுழைவுவாயில் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கிருந்த போலீசார் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த அனுமதியில்லை. எனவே கலைந்து செல்லுங்கள் என்று எச்சரித்தனர்.

    ஆனால் விவசாயிகள் இதற்கு மறுப்பு தெரிவித்ததோடு கலெக்டர் அலுவலக மெயின் ரோட்டில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது தேசிய கூட் டுறவு சர்க்கரை ஆலையில் 3 ஆண்டுகளாக அரவை செய்த கரும்பு கொள்முதல் தொகை ரூ. 212 கோடியை உடனே வழங்க வேண்டும்.

    தமிழக அரசு வருவாய் பங்கீட்டு முறையை அமல்படுத்தக்கூடாது. கரும்பு டன்னுக்கு ரூ. 4 ஆயிரம் நிர்ணயிக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    இந்த மறியலால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து விவசாய சங்கத் தலைவர்கள் பழனிச்சாமி, முருகன், அப்பாஸ் மற்றும் 75-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். #tamilnews
    ×